சென்னை, ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இந்திய மகளிர் அணி பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மனமார்ந்த வாழ்த்துகள் ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி - '10m Air Rifle' தனிநபர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையர் இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்குப் பெருமை ஏற்கனவே, இவர் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் குழுப் போட்டியில் இடம்பெற்று பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டாவது பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தொடர் உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிச்சயம் வெற்றி பெற முடியும் என இவரது சாதனை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ilavenils-achievement-is-an-example-for-the-youth-of-tamil-nadu-adhav-arjuna




