தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், "நல்ல தொடக்கமாகவே தவெக ஆலோசனைக் கூட்டம் அமைந்துள்ளது. குறைந்தபட்ச செயல்திறன் பற்றி பேசினோம். தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆலோசனைக் கூட்டம் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது. அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டோம். மிகவும் நேர்மறையாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" என்றிருக்கிறார். தொடர்ந்து தவெக 'இந்தியா' கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, "யார் யார் எம்.பி-க்கள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். தவெகவிற்கு எப்போது எம்.பி-க்கள் வருகிறார்களோ அப்போது இந்தியா கூட்டணி பற்றி பேசுவோம் " என்று பதிலளித்திருக்கிறார். `தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் ஸ்டாலின்; இனியாவது திருந்துங்கள்' - நிர்மல் குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/what-was-discussed-in-the-tvk-consultative-meeting-explanation-by-manickam-tagore




