ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பூங்காவின் காட்டுப்பாதையில், புலி ஒன்று உறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புலியின் தூக்கம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரந்தம்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பாதையில் புலி ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) மதிய நேரத் தூக்கம் போட்டது. இதனால், சுமார் 30 சபாரி ஜீப்புகள் அணிவகுத்து நின்று ஒரு வினோதமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணி பகிர்ந்த சுவாரசியம் வனப்பகுதிக்கு சுற்றுலா வந்த ‘எலெனா’ என்ற வெளிநாட்டுப் பயணி, இந்த அபூர்வ காட்சியைத் தனது கேமராவில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் விவரிக்கும் போது, "நான் சென்ற 4 சபாரிகளில், நான் பார்த்த 3-வது புலி இது. என்னுடைய பூனை வீட்டில் எப்படித் தூங்குமோ, அதேபோல இந்த 200 கிலோ எடையுள்ள புலியும் எந்தக் கவலையும் இல்லாமல் சாலையின் நடுவே படுத்துக் கொண்டது. இதனால் பின்னால் 30 சபாரி ஜீப்புகள் வரிசையாக காத்திருக்க வேண்டியதாயிற்று" என்று குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் காட்சிகள் சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த புலி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நின்றுகொண்டிருந்ததை எதைப் பற்றியும் கவலைப்படாமல், நிதானமாக சாலையில் படுத்துக் கொண்டது. இதனால் ஜீப்புகள் மேற்கொண்டு நகர முடியாமல் பின்னால் வரிசையாக நின்றன. "இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம் தான், ஆனால் இந்த முறை அது ஒரு புலியால் ஏற்பட்டுள்ளது" என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு, அந்த புலி எழுந்து சோம்பல் முறித்துவிட்டு, மெதுவாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைக் கடந்து பெரும் வைரலாகி வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tiger-sleeping-on-the-forest-path-a-unique-traffic-jam-in-ranthambore




