சென்னை, 'டாஸ்மாக்' மதுபான கடைகளில் மதுப்பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மதுபானங்களை கொள்முதல் செய்ய புதிய நடை முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'டாஸ்மாக்' கடைகள் தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் 11 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பிராந்தி, விஸ்கி போன்ற மதுபான வகைகளும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்பு அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய நடை முறை கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. சரக்கு அனுப்பும் முறையில் மாற்றம் இந்தநிலையில் மது பிரியர்கள் விரும்பும் மதுபானங்கள் பல டாஸ்மாக் கடைகளில் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் கொள்முதல் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து மாவட்ட மேலாளர்களும், டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை கோரும்போது, அந்தந்த கடைகளின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கை அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. தேவைக்கேற்ப கிடைக்கும் இதற்கு முன்பு ஜூலை 20-ந் தேதி முதல் அமலில் இருந்த, அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மது வகைகள் வாங்கப்பட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு சமமாக பிரித்து வழங்கும் முறை முழுமையாக நிறுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிட்டங்கி மேலாளர்கள் இந்த புதிய உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத சரக்கு குறையும், அதிகம் விற்பனையாகும் மதுபான வகைகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/choice-of-liquor-brands-at-tasmac-shops-new-system-comes-into-effect-today




