தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட தொழிலாளி தாராபுரம் அடுத்த கவுண்டையன் வலசு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 32) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தேங்காய் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அரிவாள் வெட்டு இந்த நிலையில் திண்டுக்கல் சேர்ந்த மாவட்டத்தைச் முனியாண்டி என்பவர் புதிதாக தேங்காய் வெட்டுவதற்காக ஈஸ்வரன் தோட்டத்திற்கு புதிதாக வருகை புரிந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் தேங்காய் வெட்டும் வேலை தொடர்பாக ரஞ்சித்துக்கும், அங்கு புதிதாக வேலைக்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ரஞ்சித் தன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முனியாண்டியின் கையை துண்டாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முனியாண்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். பிளாஸ்டிக் கவர் வெட்டுப்பட்ட கையை பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் துண்டான கையை ஐஸ் பேக்கில் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தொழிலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரின் கையை மற்றொருவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-worker-hand-severed-in-coconut-cutting-dispute




