சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பார்சல் அனுப்பும் வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. வருவாயை பெருக்க புதிய திட்டம் அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க, தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை போக்குவரத்துதுறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார். வணிக வளாகம் இது குறித்து, அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறுகையில், “கட்டண உயர்வு இன்றி இதர வழிகளில் வருவாயை பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி இடங்களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளாகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. 'பார்சல்' புக்கிங் உடனடியாக செயல்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். பயணிகள் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம். இதற்காக, புதிய பஸ் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நியாயமான முறையில் கட்டணம் இருக்கும். முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஆயிரம் அரசு விரைவு பஸ்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses




