திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் கோகுலாஷ்டமி, தங்கத் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் மாத விழாக்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; செப்டம்பர் மாதத்தில் திருமலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் விவரங்கள்: * செப்டம்பர் 4: ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம். * செப்டம்பர் 5: ஏழுமலையான் கோவிலில் சிக்யோத்ஸவம். * செப்டம்பர் 13: பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி. * செப்டம்பர் 14: பிரம்மோற்சவ விழாவிற்கான அங்குரார்ப்பணம். * செப்டம்பர் 15: பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் * செப்டம்பர் 19: ஏழுமலையான் கருட சேவை. தேரோட்டம் * செப்டம்பர் 20: தங்கத் தேரோட்டம் * செப்டம்பர் 22: தேர் திருவிழா * செப்டம்பர் 23: திருமலையில் சக்கரஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு * செப்டம்பர் 24: ஏழுமலையான் பாக் சவாரி உற்சவம் * செப்டம்பர் 25: திருமலையில் அனந்த பத்மநாப விரத உற்சவம் மற்றும் ஸ்ரீவாரி சக்ரஸ்நானம். இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/important-festivals-and-religious-events-at-tirumala-in-september-2026




