புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த நினைவுப்பொருட்கள் மின்-ஏலம் மூலம் விற்கப்படுகின்றன இந்த வகையில் இதன் 8-வது இணைய கண்காட்சி விற்பனை தற்போது நடந்து வருகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை இதனை பார்வையிட்டு வாங்கிக் கொள்ளலாம். டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளின் நினைவுப்பரிசுகள் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவேகானந்தர் பாறை நினைவகத்தால் வழங்கப்பட்ட, கன்னியாகுமரியைச் சேர்ந்த சட்டமிட்ட பாதச்சுவடு முக்கியமானது ஆகும். தமிழ் நாட்டின் பாரம்பரிய கோவில் தேர்களை பின்பற்றி கைவினை முறையில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் தேரும் உள்ளது. தமிழ்நாட்டின் பக்தி மற்றும் கலை மரபு சின்னங்கள், நடராஜ மூர்த்தியின் உலோக சிலை, தங்கத்தகடு மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்ட, தஞ்சாவூர் பாணியிலான வீணை கலைப்படைப்பு. மேலும் முருகப்பெருமானின் பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியம், முருகப்பெருமானின் தங்கத்தகடு சிற்பம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சித்தரிக்கும் பித்தளை நினை வுப்பரிசு, ஜரிகை ஓரங்களைக் கொண்ட தென்னிந்திய அங்க வஸ்திரங்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tamil-nadu-products-among-mementos-gifted-to-prime-minister-modi-sale-via-e-auction




