கோவை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த ஊட்டியை சேர்ந்த போஜன், ராஜ்கண்ணன், ராதிகா ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-plunges-into-300-foot-gorge-3-dead




