சென்னை, விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி நாகர்கோவி லில் இருந்து தாம்பரத்துக்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) இன்று (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது. வள்ளியூருக்கு 11.30 மணி, நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணி, கோவில்பட் டிக்கு 1.03 மணிக்கு வந்து செல்கிறது. தொடர்ந்து இந்த ரெயில் சாத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி. ஸ்ரீரெங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப் புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது. இதில் 15 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 சேர் கார் பெட்டிகள், 2 லக்கேஜ் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-run-between-nagercoil-and-tambaram-tonight




