சென்னை கே.கே.நகரில் கிருதியா இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பக்தி இசை, தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறை ஆகியவற்றில் தனது பங்களிப்பால் முத்திரை பதித்தவர் டாக்டர் கிருதியா. ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘பரமசிவன்’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியவர். சினிமா தாண்டி பக்தி பாடல்களும் எழுதி உள்ளார். குறிப்பாக கடவுள் விநாயகர் பெருமைப்பாடும் ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும்’ என்ற பாடல் அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இன்று பல திருவிழாக்களில், கோவில் நிகழ்வுகளில் முதல் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டுள்ளது. வீரமணிதாசன் குரலில் வெளியான புகழ்பெற்ற ‘படி பூஜை’ ஆல்பத்தில் இடம் பெற்ற ஐயப்பன் பாடல்களும் இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. இதுபோன்ற பல பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார். பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் அவர் தலைப்பு பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியர் கிருதியா மறைவு குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது உடல் சென்னை, கேகே நகர், பொன்னம்பலம் தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lyricist-krithiya-dies-of-sudden-heart-attack




