இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், விரிவான மற்றும் உயர்தர நகைக் கலெக்ஷன்களின் சிறப்பான கைவினைத்திறனுக்காக மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காகவும் அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் 67 மற்றும் சிங்கப்பூரில் 1 என மொத்தம் 68 ஷோரூம்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நவரத்தின நகைகளின் விரிவான தொகுப்புகளை வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப வழங்கி வருகிறது. திருவிழாக்கள், சமகால நிகழ்வுகள் மற்றும் கலாச்சார விழாக்களைக் கொண்டாடும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த ஆடி மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஷோரூம்களில் "ஆடி தங்கத் திருவிழா" சிறப்பு சலுகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஆடி தங்கத் திருவிழா சலுகையில், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ரூ.200 குறைவு, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு கூடுதலாக ரூ.150 மதிப்பும் பெறலாம். மேலும், வைரம் மற்றும் அன்-கட் வைர நகைகளின் மதிப்பில் 12.5% குறைவு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருட்களின் செதாரத்தில் (VA) 25% குறைவு, வெள்ளி நகைகளின் MRP-யில் 10% குறைவாகவும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இச்சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். இந்த ஆடி தங்கத் திருவிழா குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், "ஆடி எப்போதுமே நகைகள் வாங்குவதற்கான முக்கியமான பருவமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும், எங்களின் பல்வேறு நகைக் கலெக்ஷன்களில் கவர்ச்சிகரமான பலன்களுடன் 'ஆடி தங்கத் திருவிழா' சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பிரத்தியேக சலுகைகள் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பெயர் பெற்றுள்ள தரம், கைவினைத்திறன் மற்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து வழங்குவதோடு, எங்கள் வாடிக்கையாளர்களான உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுவோம் என்று நம்புகிறோம்." என்றார். இதனைத் தொடர்ந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் இந்த ஆடி சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், காலத்தால் அழியாத பாரம்பரிய வடிவமைப்புகள் மற்றும் நவீனகால டிசைன்களைக் கொண்ட உலகத் தரத்திலான எங்களின் ஜுவல்லரி கலெக்ஷன்களை பார்வையிடவும் வாடிக்கையாளர்களை அன்புடன் அழைக்கிறோம். வாடிக்கையாளர்களின் அன்பும் நம்பிக்கையும்தான் எங்களை 68 ஷோரூம்கள் வரை வளரச் செய்துள்ளது. அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாகவே இந்த சிறப்பு ஆடி சலுகைகளை வழங்குகிறோம். 'ஆடி தங்கத் திருவிழா' சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஷோரூம்களுக்கு வருகை தருமாறு வாடிக்கையாளர்களை அன்புடன் அழைக்கிறோம்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/business/article-on-grt-aadi-month-sale




