மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்தும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட்.3) நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்வர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் விஜய் இதைப் பற்றி வாய் திறந்து பேசவில்லை. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்வர். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்வருக்குத் திராணி இல்லை. லாட்டரி விற்ற அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர். முதல்வர் விஜய் விவசாயிகள் கண்ணீரைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விடுகின்றனர். ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர். தினமும் மாலை 4 மணி ஆனால் போதும் ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதல்வர்" என்று விமர்சித்து பேசியிருக்கிறார். தவெக அரசு கைவிட்ட 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள். அரசு மருத்துவமனைகளுக்கு ஏன் இழப்பு? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-slams-tvk-in-dmk-farmers-protest




