திருப்பூர், தாராபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; வேறு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்த தவெக தூய கட்சி அல்ல, தீய கட்சி. பெற்ற வாக்குகளை விற்றவர் தற்போது தவெகவில் மீண்டும் போட்டியிடுகிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கொல்லைப்புறம் வழியாக வாய்ப்பு கொடுத்து கட்சியை காப்பாற்ற நினைப்பவர்தான் விஜய். காஸ்ட்லி முதல்வர் விஜய்க்கு சனி, ஞாயிறு என்றால் விடுமுறை. தலைமைச் செயலகத்தில் என்ன கோப்புகளை முதல்வர் பார்க்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தாதவர்தான் தவெக தலைவர் விஜய். துயரம் நடந்த நேரத்தில் தவெக தலைவர் விஜய் காரில் ஏறி ஓடிவிட்டார். 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறுபவர் தேவையா? அதிமுக படிப்படியாக தவெகவிற்கு வந்துவிடும் என்கிறார்கள். அது கனவில் கூட நடக்காது. அதிமுகதான் தவெகவை விழுங்கும்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thaveka-is-not-a-pure-party-but-an-evil-party-edappadi-palaniswami-criticizes




