தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி அண்ணா நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கரம் தந்த முத்து மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றன. பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. மேள தாள வாத்தியங்கள், முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ கரம் தந்த முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/papanasam-rajagiri-muthu-mariamman-temple-kumbabishekam




