Full Article
கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார் வெளியிட்டு வருகிறார். மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு "2001-06 இல் வருவாய் 59,084 கோடியாகவும் செலவு 67,439 கோடியாகவும் இருந்தது. 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது. கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 51,000 கோடி செலவினம் அதிகரித்திருக்கிறது. செலவு அதிகரித்த அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் எதுவும் அதிகரிக்கவில்லை. மக்கள்தான் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய, கடந்த அரசு மின் துறையை சீரமைக்க ஒன்றுமே செய்யவில்லை. 5 ஆண்டுகளில் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்திருக்கிறது" என்று நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார். மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு 2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் இப்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கின்றனர். மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நம்மிடம் 74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வை எட்டவிருக்கின்றனர். பணிநியமனத்தில் 25 ஆண்டுகள் பின் சென்றிருக்கிறது தமிழகம். இந்தத்துறை வளர்ச்சி அடையாமல் போனதற்கு காரணம், கடந்த 25 ஆண்டுகளில் இந்தத் துறை வளர்ந்து வந்த பாதைதான். தேவை அதிகரித்தும் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ஊழியர்களின் உயர்வை இரண்டு மடங்கு உயர்த்திருக்க வேண்டும். ஒருத்தர் 10 பேரின் வேலையை செய்ய வேண்டியுள்ளது. மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு தற்போது மின் ஊழியர்களின் தேவை 1,40, 635. இந்த ஆண்டுக்குள் 20, 449 பேரை பணிக்கு அமர்த்த முதல்வர் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஒரு நாளைய மின் தேவை 21,307 MW. தமிழ்நாடு மின் துறை உற்பத்தி செய்யும் மின் அளவு - 3,495 MW. கடந்த 5 ஆண்டுகளில் 122 துணை மின் நிலையங்களை மட்டுமே உருவாக்கியிருக்கின்றனர் " என்றார். மேலும், ``தமிழகத்தில் தற்போது 4, 47,603 டிரான்ஸ்பாமர்கள் உள்ளன. 1,910 துணை மின் நிலையங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 122 மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. தற்போது 468 துணை மின் நிலையங்களை உருவாக்க இருக்கிறோம். 9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். உப்பூர் மின் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறி மாறி வந்ததால் பாதியில் உள்ள திட்டங்களை முடிக்க ரூ. 8 கோடி தேவை. நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். 9 டெண்டர்களில் முறைக்கேடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்படும். மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு புதிய மின்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும். 215 கோடியை மிச்சப்படுத்தும் திட்டம் அறிமுகம். தற்காலிக பணியாளர் எண்ணிகையை கணக்கெடுக்கிறோம். மின்துறை செயல்பாடுகள் இனி வெளிப்படையாக இருக்கும். ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் வேலை பெற கடன் கொடுத்தோர் புகார் அளிக்கலாம். இனி கட்சி நிதி இல்லாமல் பணிநியமினம் செய்யப்படும். கொள்முதல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றனர். அதனால் வளர்ச்சி இல்லைமின் கட்டண உயர்வால் திமுக ஆட்சியில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முன் கட்டணம் உயர்வு இல்லை. இந்தத்துறையை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். ஒரு சில மாதங்களில், ஆண்டுகளில் துறையை நிச்சயம் மேம்படுத்திவிடுவோம். தலைவர் விஜய் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இந்தத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும். இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை. மின்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் விஞ்ஞான முறையில் ஊழல் நடந்திருக்கிறது" என்று மின்சாரத்துறை அமைச்சர் விளக்கி இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



