கோவை, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்:16321) வருகிற 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 19-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கச்சிக்குடா வாராந்திர ரெயில் (எண்:16354) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-nagercoil-coimbatore-express-train-service




