திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்க ளாக வளைகுடா நாடுகளில் நடைபெற்ற வரும் போர் காரணமாக பல்வேறு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு நிறுத்தப் பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்திற்கு 3 விமான சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் குறைந்திருந்த பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-service-between-trichy-and-muscat-resumes




