மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. குற்றப்பத்திரிகை இந்த சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொலை வழக்குப்பதிவு இந்நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மானாமதுரை சரக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவிட்ட நிலையில் டி.எஸ்.பி., ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டனர். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையின்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-case-registered-against-four-police-personnel-in-the-madapuram-watchman-ajithkumar-case




