வாஷிங்டன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜெஸ்டர்பீல்ட் நகரில் வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகம் அருகே விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். துப்பாக்கி சூடு இந்நிலையில், வெர்ஜீனியா பல்கலைக்கழகம் வளாகம் அருகே இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/usa-shooting-near-university-campus-5-injured




