புதுடெல்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பலரும் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளியே இருந்தால் சாட்சிகளை அச்சுறுத்தவும், சாட்சியங்களை அழிக்கவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து தலைமறைவாகவும் அதிக வாய்ப்புள்ளது. மாநில காவல்துறையின் விசாரணையில், இவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டது, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்து கடத்தியது, நிதி உதவி அளித்தது மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடியாக பங்கேற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் எந்தவித அழுத்தமும் இல்லாமல், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமானால் ஜாமின் உத்தரவுகளை ரத்து செய்து குற்றவாளிகளை மீண்டும் காவலில் அடைக்க வேண்டும். சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு ஆறு மாதம் அவகாசம் வழங்கி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு தடய அறிவியல் அறிக்கைகள், அழைப்பு பதிவுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/armstrong-murder-case-cbi-files-status-report-in-supreme-court




