சென்னை, தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக பல ஆண்டுகளாக கோலோச்சியவரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய், கடந்த 2023-ம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி, அரசியலில் கால்பதித்தார். அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி மக்களை சந்திக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி அவர் கரூர் மாநகருக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை நேரில் காணும் ஆவலில் அவரது கட்சியினரும், பொதுமக்களும் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் சிக்கினர். முடிவில் 41 பேரை இந்த நெரிசல் சம்பவம் பலி கொண்டு கரூரை கண்ணீரில் மூழ்கடித்து விட்டது. கால சுழற்சியில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஓராண்டாகி விட்டது. ஆனால் அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது. இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-tragedy-dmk-mp-kanimozhi-pays-tributes




