தேவையான பொருட்கள்: சேமியா -100 கிராம், வெங்காயம் - 1, கேரட் - 1, பட்டாணி - 50 கிராம், பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - ½ டீஸ்பூன், வறுத்த முந்திரி - 20 கிராம், திராட்சை - 10 கிராம், நெய் அல்லது வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ½ டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: முதலில் சேமியாவை தேவையான அளவு தண்ணீரில் குழையாமல் வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, கேரட், பட்டாணி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து காய்கறிகள் மென்மையாகும் வரை வதக்கவும். அதன்பின் உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கிளறி, வேகவைத்த சேமியாவை சேர்த்து மெதுவாக கலக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறலாம். சுவையான, மணமணக்கும் சேமியா புலாவ் மாலை நேர சிற்றுண்டிக்கு அருமையாக இருக்கும். மாலை நேர டிபன்: சுவையான ரவா கிச்சடி செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/ampstories/photo-story/evening-tiffin-delicious-semiya-pulao




