புதுடெல்லி, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய மன்றமும், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார்மயமாக்கும் முயற் சியை கைவிடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் நாடு தழுவிய அளவில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்தியன் வங்கி. பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்டவை நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செயல்பட்டன. பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகளை பொதுமக்கள் பெற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருப்பு உடைகளை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி பொதுமக்கள் விடுமுறையில் வீடுகளில் இருந்ததால் வங்கிகளில் செய்ய வேண்டிய பணிகளை நேரடியாக சென்று முடித்தனர். ஞாயிற்றுக்கிழமையில் வங்கி செயல்பட்டதை மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் விடுமுறை நாளில் வங்கி திறந்திருந்ததால் தங்களது வங்கிப்பணிகளை செய்து முடித்தனர். தற்காலிகமாக ஒத்திவைப்பு இந்நிலையில் நேற்று இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தது. இதனை தொடர்ந்து இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல செயல்பட்டன. காலை 10 மணிக்கெல்லாம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு வந்தனர். பணம் எடுத்தல், பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் மேற்கொள்ளப்பட்டன. ஸ்டிரைக் காரணமாக, மாதத்தின் கடைசி வாரத்தில் வங்கிச் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்ட நிலையில், அந்த அபாயம் தவிர்க்கப்பட்டதால், வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/3-day-bank-strike-called-off-banks-open




