பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் குத்தகை எடுத்து சூரியகாந்தி பயிரை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில், சூரியகாந்தி அறுவடை பணிகள் நடக்க ஏற்பாடு செய்த அவர், அதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்து இருந்தார். மேலும், இப்பணிக்காக அய்யலூர் இளங்கோ நகரைச் சேர்ந்த வடிவேல் மனைவி பானுமதி ( 50) என்பவரையும் ஈடுபடுத்தியிருந்தார். perambalur இந்நிலையில், பானுமதி, சூரியகாந்தி பூக்களை அறுவடை எந்திரத்தில் கொட்டிக்கொண்டிருந்தார். அப்போது, பானுமதியின் சேலை இயந்திரத்தில் சிக்கியது. இதில், இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் காவல் நிலைய போலீஸார், பானுமதி உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த பாடாலூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரியகாந்தி பயிர் அறுவடையின் போது அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/accidents/perambalur-women-employee-died-in-harvest-machine




