தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை வழக்கில் 2 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சதீஷ்(26) மற்றும் பாலமுருகன் மகன் மதன்(24) ஆகிய 2 பேரையும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இரட்டை ஆயுள் தண்டனை இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட PCR (Protection of Civil Rights Act - குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வசீத்குமார் நேற்று (28.7.2026) சதீஷ், மதன் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-convicted-in-thoothukudi-murder-case-sentenced-to-double-life-imprisonment




