தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்தி வரும் போராட்டம் நேற்று 23-வது நாளை எட்டியது. இப்போராட்டத்துக்கு ஆதரவளித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல கல்விப்பணியாளரும், சமூக ஆர்வல ருமான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதுபற்றி மருத்துவக் குழுவினர் கூறுகையில், உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல் எடை 7.8 கிலோ குறைந்துள்ளதாக தெரிவித்தனர். அவரைப் போல, ஏ.ஐ.எஸ்.ஏ. மாணவர் அமைப்பைச் சேர்ந்த நேஹா, மனிஷ், தீபக்குமார் வர்மா ஆமீன் ஆகியோரும் தனி மேடையில் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜூலை 20-ந்தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ந் தேதியில் இருந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்த விமர்சனத்தை அடிப்படையாக கொண்டு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இயக்கத்தை ஆரம்பித்த ஆப்ஜித் தீப்கே, நாட்டில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சீர் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார். அவரது போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவும் குவிந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/hunger-strike-social-activist-sonam-wangchuks-health-condition-critical




