கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மாறி மாறி கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா, ஈரான் தற்போது மோதலுக்கு சின்ன இடைவேளை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது? கடந்த இரண்டு வாரங்களாக, கப்பல்கள் மீது தாக்குதல், கட்டமைப்புகள் மீது தாக்குதல் என தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், திடீரென்று கடந்த இரண்டு நாள்களாக இரு நாடுகளும் தாக்குதலை நடத்தவில்லை. இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லையென்றாலும், இந்தப் போர் நிறுத்தம் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்த இடைவேளை காட்டுகிறது. ஈரான் போர்Gold: இப்போது குறையும் தங்கம் விலை; இதற்கான 3 காரணங்கள் என்னென்ன? இதனால். இரண்டு நாள்களாக எந்தத் தாக்குதலும் இல்லாததால் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 5 சதவிகிதம் குறைந்துள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தகவலின் படி. கடந்த வாரம் நடந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கக் கூட்டுப் படைத் தலைவர்கள் குழு, 'இந்தப் போர் நீடித்தால் என்னென்ன பிரச்னைகள் வரலாம்' என்பதை விளக்கியிருக்கிறார்கள். ஈரான் போரில் அமெரிக்க ராணுவ தளவாடங்களில் இருக்கும் ஆயுதத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றன. அமெரிக்க வீரர்களும் தாக்குதலில் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அடுத்ததாக, வரும் நவம்பரில் அமெரிக்காவில் மிட்-டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் போரை தொடர்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல. இதனால் தான், ட்ரம்ப் தாக்குதலை நிறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால், ஈரானும் இதற்கேற்ற மாதிரி போரை நிறுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/trump-pauses-iran-strikes-as-diplomatic-talks-gain-momentum




