டெல் அவிவ் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவர் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸ் ஆயுத குழுவை சேர்ந்தவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளம்பெண்கள், ஆண்கள் என 1,100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். காசா முனை இதுதவிர, இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பினர், பணய கைதிகளாக காசா முனைக்கு கடத்தி சென்றனர். எனினும், பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையில் மீட்ட இஸ்ரேல் தொடர்ந்து அதிரடி தாக்குதலிலும் ஈடுபட்டது. காசா முனையில் நடந்து வரும் போரில் இதுவரை 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1.74 லட்சத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர். நிதித்துறை தலைவர் இந்த நிலையில், காசா நகரின் தெற்கே அமைந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவரான முகமது அபு அல்வான் படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்ட பிரதமர் அலுவலக அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/israel-launches-major-strike-hamas-finance-chief-killed




