Full Article
'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட். ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்பது அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதே ரூல் தான் பான் கார்டு, வாக்காளர் அட்டைக்கும். என்னது வாக்காளர் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லையா என்று ஷாக் ஆகாதீர்கள். ஆதார் அட்டைதொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ! இந்தியர்கள் மட்டுமே வாக்காளர் அட்டை பெற முடியும் என்றாலும், வாக்காளர் அட்டையை முழுமையான குடியுரிமை ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது. ஆனால், மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் தான் நாம் இதுவரை பல இடங்களில் ப்ரூஃப் ஆக காட்டிக் கொண்டிருக்கிறோம். அவை அனைத்தும் அடையாளம் மற்றும் முகவரிக்கான ப்ரூஃப் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை குடியுரிமைக்கான ப்ரூஃப்பாக எங்கேயும் காட்ட முடியாது. அப்போது எது தான் குடியுரிமைக்கான ஆதாரம்? பிறப்பு சான்றிதழ் - இது மிக மிக முக்கியமானது. ஏனெனில் இது பிறந்த தேதி, பிறந்த இடம் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும். அதனால், இது முக்கியமான குடியுரிமை சான்றிதழாக கணக்கில் எடுத்துகொள்ளப்படுகிறது. குடியுரிமை சான்றிதழ் - இது இந்திய அரசால் வழங்கப்படும் நேரடி குடியுரிமை ஆவணம். இந்தியாஅரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்? Naturalisation சான்றிதழ் - வெளிநாட்டுக் குடியிரிமையில் இருந்து ஒருவர் இந்திய குடியுரிமைக்கு மாறினால் கொடுக்கப்படும் ஆவணம் இது. பதிவு சான்றிதழ்: குடியுரிமை சட்டத்திற்குக் கீழ், குடியுரிமைக்காக வழங்கப்படும் ஆதாரம் இது. ஆக, இவற்றை மட்டுமே குடியுரிமைக்கான ஆதாரமாக காட்ட முடியும். இந்தியாவில் குடியுரிமைக்கான ஆதாரம் என்று பிரத்யேகமாக... அனைவருக்குமான எந்த ஆவணமும் இல்லை. மற்றதையெல்லாம் ஏன் குடியுரிமைக்கான ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது? வெளிநாட்டினர் கூட ஆதார் கார்டு, பான் கார்டை பெற முடியும். அதனால், அந்த இரண்டையும் குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது. பாஸ்போர்ட் பெறும் போது, போலி ஆவணங்கள் பிரச்னைகள் இருப்பதால், அதை குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்ததாக, பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20-ன் படி, பொது நலத்திற்காக இந்திய அரசு இந்தியர் அல்லாதோருக்கும் பாஸ்போர்ட் வழங்க முடியும். 'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



