சென்னை, 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள் நாளை (செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். கவிதை வரிகள் வருமாறு:- “தவிர்க்க முடியாத தமிழ்ச் சொல் ஒன்று ஆதித்தனார் இருள்கட்டிய தமிழகத்தின் ஆதித்தன் ஆனார் ஆதித்தனார் தமிழர்களை யோசிக்க வைத்தவர் பெரியார்; வாசிக்க வைத்தவர் ஆதித்தனார் தினத்தந்தி செய்த அன்றாட மாயங்களைக் கொண்டாட வேண்டும் தினத்தந்தி வந்துவிழும் தாளோசையில் தமிழன் கண்விழித்தான் எழுத்தறிவு இல்லாதவனும் எழுத்துக் கூட்டினான் சர்வதேச அரசியல் பேசப்பட்டது சலவைக் கடையில் சிகை அலங்காரக் கடைக்குள் சிகாகோ புகுந்தது தேநீர்க் கடைகளில் தேநீரை விடவும் தினத்தந்தி சூடானது தந்தியில் தன்பெயர் கண்டவன் மந்திரியானதாய் மகிழ்ந்தான் பள்ளிப் பருவத்தில் தினத்தந்தியால் நான் என் நோட்டுப் புத்தகங்களின் அட்டைக்கு ஆடைகட்டினேன் கன்னித்தீவு முடியுமுன்னே பலபேர் காலமாகிவிட்டார்கள் ஆதித்தனைப் போலவே ஆதித்தனாரும் உதித்துக்கொண்டேயிருப்பார் ஒவ்வோர் அதிகாலையிலும் வாழ்க பெருமகனே! நீ காயாமொழியின் தேயாமொழி; ஆழி அலைபோல் ஓயாமொழி.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/adithanar-an-indispensable-tamil-word-poet-vairamuthu




