திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறிய சேஷ வாகன வீதிஉலா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'பாண்டுரங்கன்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன வீதிஉலா முன்னால் ஸ்ரீவேங்கடேஸ்வர இசை மற்றும் நடனக் கல்லூரி கலைஞர்கள் பரத நாட்டியம், ஒடிசி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். செவ்வியல் நடனங்களுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. 539 கலைஞர்கள் நடனம் ஆந்திரப் பிரதேச கலைக்குழுக்கள் 'எதுகுல வைபவம்' கோலாட்டம் ஆகியவற்றை நடத்தினர். புதுச்சேரி கலைஞர்கள் 'ஒயிலாட்டம்' நிகழ்ச்சியை வழங்கினர். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்த்திய ‘ஸ்ரீமத் ராமாயணம்' பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மராட்டிய கலைஞர்களின் 'தாகர் காஜா', 'ட்ரீம்ஸ்', அசாம் கலைஞர்களின் 'போர்தால்', மேற்கு வங்கக் கலைக்குழுக்களின் ஒடிசி நடனம் ஆகியவை பக்தர்களை கவர்ந்தன. மேலும் பிஹு, மஞ்சுநாத சரிதம், காளிங்க நர்த்தனம், கோலாட்டம், தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை நடனம் ஆகியவை உள்பட 20 கலைக்கு ழுக்களில் இருந்து 539 கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரிய கலை வடிவங்களை பக்தி, இசை, நடனத்துடன் இணைத்து நிகழ்த்தி பக் தர்களை பரவசப்படுத்தினர். அத்துடன் கலைஞர்களின் பாரம்பரிய உடை கள், இனிமையான இசை, அற்புதமான நடன அசைவுகள் ஆகியவை நான்கு மாட வீதிகளுக்கும் கலை அழகை சேர்த்தன. ஹம்ச வாகன வீதிஉலா தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் எழுப்பி சாமி கரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tirupati-temple-brahmotsavam-procession-of-lord-malayappa-swamy-on-the-chinna-sesha-and-hamsa-vahanams




