புதுடெல்லி, இங்கிலாந்து பிரதமராக இருந்த கெயிர் ஸ்டார்மர், கடந்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் ஆண்டி பர்ன் ஹாம் (வயது 56) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நேற்று இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் விரிவான ஒத்துழைப்பை பேணி வருகின்றன. 'விஷன் 2035' என்ற இரு நாடுகளின் இலக்கை முன்னெடுக்கவும், தங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/modi-congratulates-new-uk-pm-andy-burnham




