திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ் ‘என்ன விலை’ படம் தனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார். கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். சிறுவர், சிறுமிகளும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார். ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பழூர் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகுகிறார். நான்கு விருதுகள் வென்ற ‘என்ன விலை’ படம் சஜீவ் பழூர் ‘என்ன விலை’ படத்தை ஏற்கெனவே பல திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளார். அதில் நான்கு விருதுகள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு துருக்கியில் நடைபெற்ற கையா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘என்ன விலை’ படம் தேர்வாகியுள்ளது. சித்தன்னவாசல் சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘என்ன விலை’ திரைப்படம் ‘சிறந்த இந்தியத் திரைப்பட’ விருதை வென்றுள்ளது நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். திரைப்படம் குறித்து நடிகர் கருணாஸ் ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகர் கருணாஸ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை - மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-karunas-completes-25-years-in-the-film-industry




