சென்னை, சென்னை கோடம்பாக்கத்தில் கனடா பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்தி மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். சென்னையில் தங்கியிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி முத்து என்ற கிளி ஜோசியரை சந்தித்து ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது ஜோசியர் பெண் குறித்து பல்வேறு தகவல்களை கூறியதால் அவரை நம்பிய பெண் தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்று புகழ் பெற வேண்டும் என கேட்டுள்ளார் நிர்வாண வீடியோ அதற்கு ஜோசியர் தங்கியிருந்த அறையில் இருந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டால் புகழ் பெறுவீர்கள் என கூறியுள்ளார். இதை நம்பிய கனடா பெண் தான் தங்கி இருந்த அறையில் இருந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டார். அதனை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, நேரடியாக ஜோசியர் இசக்கி முத்து பார்த்தபடி பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் பெண்ணிடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என அந்த பெண்ணை இசக்கி முத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் வீடியோ காலில் வந்த நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. வழக்குப்பதிவு இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பெண் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரின் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றாலத்தில் பதுங்கி இருந்த இசக்கி முத்துவை நேற்று இரவு கைது செய்தனர். இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/naked-ritual-to-ward-off-bad-luck-astrologer-extorts-money-from-canadian-woman-by-threatening-her




