லண்டன், இங்கிலாந்தில் விவசாயி ஒருவர், அதிக காரத்தன்மை கொண்ட 1.750 கிலோ எடையுள்ள யானைப் பூண்டு ஒன்றை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் கிளவ்செஸ்டர்ஷைனை சேர்ந்த கிரஹாம் பாரட் என்பவர், போட்டி அடிப்படையில் தோட்டக்கலையில் ஈடுபடும் விவசாயி. இவர் தனது நிலத்தில் கோடை காலத்தில் 2 வகை காய்கறியை அதிக எடையில் அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் தனது வயலில் விளைந்த அதிக எடையிலான யானைப் பூண்டு, ஸ்னோ பட்டாணி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பெர்ஷயலில் உள்ள வார் கிரேவ் நர்சரி செடி மையத்திற்கு சென்றார். கின்னஸ் உலக சாதனை அதை எடைபோட்டு பார்த்த அங்குள்ள ஊழியர்கள் அதிசயித்து போனார்கள். யானைப் பூண்டு 3 பவுண்டு 13.7 அவுன்ஸ் (1 கிலோ 750 கிராம்) எடையில் இருந்தது. அதன் விட்டம் மட்டும் 7.5 அங்குலமாக இருந்தது. ஸ்னோ பட்டாணி 0.98 அவுன்ஸ் (28 கிராம்) எடையில் இருந்தது. இதில், அதிக காரத்தன்மை கொண்ட யானைப் பூண்டு, அதிக எடை கொண்டதாக கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது. அதேபோல், ஸ்னோ பட்டாணியும் உலகின் மிக கனமான பட்டாணியாக சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் விவசாயி கிரஹாம் பாரட்டிடம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/adengappa-ettha-thandi-farmer-sets-guinness-world-record-by-harvesting-1750-kg-of-garlic




