திருமலை, திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், மான்கள், மலைப்பாம்புகள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்ளன. அவைகள் அடிக்கடி உணவுத்தேடி மக்கள் நடமாடும் பகுதிக்கும், மலைப்பாதைகள் ஓரமும் வருவது வழக்கம். அதில் சிறுத்தைப்புலிகள் அலிபிரி நடைபாதை ஓரம் இருக்கும் மான் பூங்கா பகுதிக்கும் அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது. சிறுத்தைப்புலி இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சமடைந்தனர். உடனே வாகன ஓட்டிகள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தைப்புலியை பிடிக்க முடிய வில்லை. அது, அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டது. வனத்துறை இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பதி மலைப்பாதைகளில் செல்லும் தனியார் வாகனங்கள், ஜீப், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் நடுவழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். இரு மலைப்பாதைகளில் எச்சரிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லாமல் குழுவாகச் செல்ல வேண்டும். மலைப்பாதையோரம் சிறுத்தைப்புலிகள் நடமாடினால் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-movement-on-the-tirupati-hill-road-warning-issued-against-stopping-vehicles




