அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நிறைய தடைகள் இருந்தன. பிரச்னைகள் இருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. ஜனநாயகன் படத்துக்கு எல்லோரும் ஆதரவு கொடுங்கள். இந்தப் படத்திற்கு அநீதி நடந்திருக்கிறதா? அல்லது நல்லது நடந்திருக்கிறதா? என்று மக்களுக்குத் தெரியும். அதற்கான நீதியாக மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 'A' சான்றிதழ் கொடுத்தது எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் உண்மையிலேயே இல்லை. இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதுதான் எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி மக்கள் நினைத்திருந்தால் திரையரங்கிற்கு வராமல் கூட இருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு (படம் லீக்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் மக்கள் அதையும் மீறி திரையரங்கில் படத்தைப் பார்க்க நினைக்கிறார்கள். அவர்களின் நேர்மைக்கு, விஜய் சார் மீது வைத்திருக்கும் மரியாதைக்குப் பெரிய சல்யூட்தான் கொடுக்க வேண்டும். காலத்திற்கும் நன்றிக்கடன்பட்ட ஒரு விஷயமாகத்தான் இதைப் பார்க்கிறேன். நிறைய இயக்குநர்கள் விஜய் சாருக்கு கதை சொன்னார்கள். எச். வினோத் அவருடைய கடைசிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை இருந்திருக்கும். எல்லாரும் சொன்ன கதையை விட இன்னொரு கதை பிடித்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் யாருக்கு வேண்டுமானால் கொடுத்திருக்கலாம். அவர் என்னைக் கேட்கும்போது அதற்கு 'நோ' சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. விஜய் சாருடன் படம் பண்ண வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய விஷயம். அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்" என்று பேசியிருக்கிறார். Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்." - அ. வினோத் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/director-h-vinoth-about-jana-nayagan-movie-censor-issues




