சந்தோஷ் தவாகர் இயக்கிய ‘கோந்தல்’ என்ற மராத்தி திரைப்படம், 2027 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சினிமா உலகில் தலைசிறந்த விருதாக ‘ஆஸ்கர் விருது’ கருதப்படுகிறது. இந்த விருதினை பெறுவது உலகெங்கும் திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க இளையராஜா இசையமைத்த ‘கோந்தல்’ எனும் மராத்தி திரைப்படம் இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில், இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான மராத்திய திரைப்படம் ‘கோந்தல்’. மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கோந்தல்’ படம் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றது. இந்த நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ஹரிஷ்சந்திரச்சி பேக்டரி (2009), ஸ்வாஸ் (2005), கோர்ட் (2015) ஆகிய 3 மராத்தி மொழிப் படங்கள் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 99வது அகாடமி விருது வழங்கும் விழா, 2027 மார்ச் 14 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஹாலிவுட் பொலேவார்ட் நகரில் அமைந்திருக்கும் டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/marathi-film-gondhal-is-indias-pick-for-oscars-2027




