லீட்ஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கி லாந்து சென்றுள்ளது. இதில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த பிறகு இந்த போட்டியில் கால்ப திக்கிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை சமன் செய்த கையோடு வந்த பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் அடைந்தார். அவரது காயம் குணம் அடையாததால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சல்மான் ஆஹா அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 92 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக் கின்றன. இதில் 30-ல் இங்கிலாந்தும், 23-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. 39 ஆட்டங் கள் டிராவில் முடிந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/england-vs-pakistan-first-test-begins-today




