தெஹ்ரான் ஈரானில் 7.5 லட்சம் கோடி கன அடி கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள ஈரான் அதில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் பார்ஸ் மாகாணத்தில் 7.5 லட்சம் கோடி கன அடி (212.4 பில்லியன் கன மீட்டர்) கொள்ளளவு கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி ஈரான் எண்ணெய் அமைச்சர் மோசென் பாக்னிஜாத் கூறும்போது, இந்த எண்ணெய் வயலில் இருந்து 5.7 லட்சம் கோடி கன அடி எரிவாயுவை பிரித்தெடுக்க முடியும் என்றார். இதனால், வளர்ச்சிக்கான செலவுகள் மற்றும் செயல் திட்டத்திற்கு ஆகும் செலவுகள் குறையும் என்றும் கூறியுள்ளார். எரிசக்தி ஆலைகள் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த வளம் அந்நாட்டின் எரிசக்தி தேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலால் ஈரானின் எரிசக்தி ஆலைகள், அமைப்புகள் சேதமடைந்த நிலையில், அதனை பழுது பார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. அதனுடன், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டு இருப்பது, ஈரானின் பொருளாதாரத்திற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்த சூழலில், எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இனிமை தரும் விசயம் என பாக்னிஜாத் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/iran-hit-jackpot-discovery-of-new-natural-gas-reserve-of-7-5-lakh-crore-cubic-feet




