தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதையடுத்து இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடந்த இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமுமின்றி காலாவதியானது. அதேவேளை, ஹர்முஸ் ஜலசந்தி தங்களுக்கு சொந்தம் என்று அமெரிக்காவும், ஈரானும் உரிமைகோரி வருகின்றன. ஈரான் மிரட்டல் இதனிடையே, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவில் பொருளாதார போர் தொடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், ஈரானின் துறைமுகங்களையும் அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா எடுத்து வரும் பொருளாதார ரீதியிலான தாக்குதல்களில் அண்டை நாடுகள் இணைந்தால் அவர்களும் எதிரி நாடுகளாக கருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/if-they-join-us-economic-war-on-iran-they-are-enemies-too




