பலூசிஸ்தான், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 'ஓசி'க்கு பொருள் தர எதிர்ப்பு தெரிவித்த இந்து வியாபாரியை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். 'ஓசி'க்கு பொருள் கேட்டு தொந்தரவு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி பஜாரை சேர்ந்தவர் ராகேஷ்குமார். இந்து மதத்தை சேர்ந்த வியாபாரியான இவர் சொந்தமாக கடை வைத்து தொழில் பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு ராகேஷ்குமார் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரிடம் 'ஓசி'க்கு பொருள் கேட்டு தொந்தரவு செய்தனர். இந்து வியாபாரி சுட்டுக்கொலை 'ஓசி'க்கு பொருள் தர எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ராகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/hindu-trader-shot-dead-in-pakistan-for-protesting-against-supply-of-goods-to-oc




