சென்னை, ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அரசு பிணையப் பத்திரங்கள் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. ஏலம் இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 15, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) 1 1 (Electronic format) செப்டம்பர் 15, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-auction-of-securities-worth-6000-crore




