முதலீடு மற்றும் நிதி சார்ந்த அறிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், Magic 20 Tamil சார்பில் நடத்தப் படும் ’Magic Money Summit – Bangalore Edition’ வரும் அக்டோபர் 10-ம் தேதி, பெங்களூருவில் உள்ள Radisson blu atria ஹோட்டலில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதலீட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். கருத்தரங்கம் நிதித் துறை மற்றும் முதலீட்டில் அதிகம் ஈடுபடும் இடமாக மும்பைதான் இருந்துவருகிறது. மும்பைக்கு நிகரான நிதி அறிவையும், முதலீட்டு ஆர்வத்தையும் தென்னிந்தியாவில் உருவாக்கும் நோக்கத்துடன் ‘மேஜிக் மணி சம்மிட்’ தொடர்ந்து பல்வேறு நகரங் களில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது பெங்களூருவில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, மாற்று முதலீடுகள், தங்கம், வெள்ளி மற்றும் பிற கமாடிட்டிகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னணி நிபுணர்கள் தங்களது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர். சுந்தரம் ஆல்டர்நேட்ஸ் கார்த்திக் ஆத்ரேயா, ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி’ சிந்தன் ஹரியா, ‘360 ஒன் அஸெட் மேனேஜ்மென்ட்’ ராகவ் ஐயங்கார், ‘டாடா மியூச்சுவல் ஃபண்ட்’ தபான் படேல், ‘ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஏ.எம்.சி’ மணிஷ் குப்தா ஆகியோருடன் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ், ‘கோயம்புத்தூர் கேப்பிடல்’ பேராசிரியர் கார்த்திகேயன், ‘காம்ட்ரெண்ட்ஸ்’ ஞானசேகரன் தியாகராஜன் உள்ளிட்ட நிபுணர்களும் உரையாற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பதிவு செய்ய இங்கே கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்யவும். மேலும், தகவல்களுக்கு 8148718103, 9597793085 எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/personal-finance/money/magic-money-summit-bangalore-edition




