பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க. வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 862 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடி தேர்தல் களமாக இருப்பதால் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தொகுதி நீண்டகாலமாக பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படுவதால், வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றும் அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை மாறக்கூடும் என்றாலும் முதல் சுற்றில் முன்னிலை எடுத்து இருப்பதால் இந்த தேர்தல் முடிவு கவனம் பெறத்தொடங்கியுள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது. வெறும் 3.3 சதவீத வாக்குகளே அக்கட்சி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/bihar-by-election-prashant-kishor-in-the-lead




