அன்டிகுவா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரின்பகோ - அன்டிகுவா இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ட்ரின்பகோ 166 ரன்கள் இலக்கு இதையடுத்து களமிறங்கிய ட்ரின்பகோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் காலிங் மன்ட்ரோ அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார். ட்ரின்பகோ தரப்பில் அந்த அணியின் கார்ன்வெல், ஜேம்ஸ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அன்டிகுவா வெற்றி இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அன்டிகுவா 18.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ட்ரின்பகோ நைட் ரைடர்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சதாப் கான் 20 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-antigua-stun-trinbago




