சென்னை தவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஊழல் செய்யவும் கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக. அதனால்தான், ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதன் உச்சபட்சமாக, அறிவாலயத்தில் இருக்கும் மரங்கள்கூட அதிர்ச்சியில் அசைவற்று நிற்கின்றன. கேடுகெட்ட மனநிலை மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சிக்கு எப்படியாவது கேடு விளைவிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட மனநிலையுடன், இதுவரை சேராதவர்களுடன் எல்லாம் சேர்ந்து சதி செய்து வருகின்றனர். தீயசக்தியும் மற்றும் பலரும் ஒரே குரலில் ஒரே வாயில் பேசத் தொடங்கி உள்ளதும் மக்கள் விரும்பும் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிக்கான அத்தாட்சியே. நம் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கரூர் நிகழ்ச்சிக்கும் மக்கள் சந்திப்புக்கும் கூடத் தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடுத்தது. பேச்சுரிமைக்கும் தடை கேட்டுத் தாண்டிக் குதித்தது. தீயசக்தி திமுக திமுக தறிகெட்டுத் தாறுமாறாக ஆட்டம் போடுவதை சுப்ரீம் கோர்ட்டும் உணர்ந்துவிட்டது போல. வழக்கு தொடுத்து மனு செய்யும்போது அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்து அனுப்பி உள்ளது. அதன் பிறகுதான் புத்தி வந்ததோ. போட்ட மனுவையும் திரும்பப் பெற்றுள்ளது திமுக. தீயசக்தி திமுகவிற்கு ஜனநாயகத்தின் தீர்ப்பு மன்றமான மக்கள் மன்றமும் பிடரி பிடித்து உலுக்கி, பின்னங்கால் பிடரியில் பட, அரசியல் களத்தில் இருந்தே ஓட வைக்கப் போகிறது. வெற்றித் தலைவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பிற்கும் மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பிற்கும் முன், தீயசக்தி திமுகவின் விதிகளும் சதிகளும் மண்ணோடு மண்ணாக வீழப் போவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/ever-since-the-loss-of-power-the-evil-force-has-been-choking-the-dmk-tvk-review




