சென்னை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கடந்த மே மாதம் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 7,798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முறைகேடுகள் நடந்துள்ளதாக த.வெ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது மனு த.வெ.க. மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு சட்டவிரோத நடவடி க்கைகள் நடைபெற்றதாகவும் குறிப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவை பாதிக்கும் வகையில் சட்டவிரோத காணொளிகள் பரப்பட்டதாகவும், அவை வாக்காளர்களின சுதந்திரமான வாக்குரிமையில் தலையீடு செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்க ப்பட்டிருந்தது. முயற்சி இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விபின் சக்கரவர்த்தி கூறுகையில், தேர்தல் நேர்மை மற்றும் ஜனநாயகத்தின் புனிதத்தை காக்கும் நோக்கில் இந்த சட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் பரிசீ லனைக்கு கொண்டு செல்வதன் மூலம் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த முயற்சியை எடுத்துள்ளேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/madras-high-court-tvk-files-case-against-alangulam-election-result




