துருவ் விக்ரமிற்கு 'பைசன்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட்டின் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில், 'டியூட்', 'குட் பேட் அக்லி', 'மொத ராத்திரி' படங்களைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. Dhruv Vikram - Jackie 'ஆதித்ய வர்மா' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கரண் அரவிந்த் குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நேற்றைய தினம் படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு 'ஜாக்கி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கக் கமர்சியல் படமாக இது இருக்கும் என்பதையும் போஸ்டர் அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது படக்குழு. இதனைத் தொடர்ந்து டோலிவுட் இயக்குநர் ஒருவருடனும் துருவ் விக்ரம் கைகோத்திருக்கிறார். டோலிவுட் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்திலும் துருவ் விக்ரம், ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது எனவும் அறிவித்திருக்கிறார்கள். Ramesh Varma - Dhruv Vikram இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது 'மகாவீர் கர்ணா' என்கிற ஹைப்ரிட் லைவ் ஆக்ஷன் படத்தில் பிஸியாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் முதல் ஹைப்ரிட் லைவ் ஆக்ஷன் திரைப்படம் இதுதான் எனவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. ராகவா லாரன்ஸின் 25வது படமான 'கால பைரவா' படத்தையும் ரமேஷ் வர்மா இயக்குவதாக அறிவிப்பு முன்பு வெளியாகியிருந்தது. Dhruv Vikram: "நாம் உண்மையோடு இருந்தால்." - சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்து துருவ் விக்ரம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/dhruv-vikram-next-movie-jackie-mythri-movie-makers-updates




